டாக்டர் ராஜேந்திர பிரசாத்..! Dr. Rajendra Prasad ..!

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..! Dr. Rajendra Prasad ..! குடியரசுத் தலைவர்..! BZ.Famous Men, (26 ஜனவரி 1950 - 13 மே 1962) ◆ வடக்கு பீகாரில் ஓர் குக்கிராமத்தில் 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். ◆ பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார். ◆ தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார். ◆ 1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். ◆ 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக் கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். ◆ 1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை ...