முதலாவது எகிப்திய பேரரசின் அரசர் மெனஸ் | King Menas of the First Egyptian Empire ...!
முதலாவது எகிப்திய பேரரசின் அரசர் மெனஸ்...! King Menas of the First Egyptian Empire ...! மெனஸ் (Menace ) மெனஸ் (கி.மு. 3100) புகழ் பெற்ற மனிதர்கள், மெனஸ் (Menace ) முதலாவது எகிப்திய அரச மரபின் ஆதி அரசராகிய மெனஸ் (மெனஸ்), எகிப்து நாட்டை முதலில் ஒருங்கிணைத்ததன் மூலம், மனித நாகரிகத்தில் ஒரு நீண்ட காலத்திற்குச் கீர்த்திமிகு பங்கினை ஆற்றிய முடியரசை நிறுவினார். மெனஸ் பிறந்த, இறந்த தேதிகள் தெரியவில்லை. எனினும் இவர் கி.மு. 3100 ஆம் ஆண்டில் பிறந்தவரெனப் பொதுவாக நம்பப்படுகிறது. அதற்கு முந்தைய காலத்தில் எகிப்து ஒருங்கிணைந்த ஒரு நாடாக இருக்கவில்லை. மாறாக, இரு சுதந்திரமான முடியரசுகளைக் கொண்டிருந்தது. ஒன்று வடக்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியிலும், மற்றொன்று தெற்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியிலும், மற்றொன்று தெற்கில் நைல் பள்ளத்தாக்கின் நெடுகிலும் அமைந்திருந்தன. (நைல் ஆறு கடலை நோக்கிக் கீழாகப் பாய்வதால் பண்டைய எகிப்திய நாட்டுப் படங்களில், நைல் ஆற்றின் முகவாய்கள், பக்கத்தின் அடியின் காணப்பட்டன. அந்தக் காரணத்தினால், வடக்கிலிருந்து கழிமுகப் பகுதியை கீழ் எகிப்து என்றும், தெற்கு முடியரசை ...