மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான் | Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan

மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான்..! Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan..! (மதுரை நாயகம்) முதுகுளத்தூர் மண்ணின் மைந்தன் மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான், (பிறப்பு கி.பி 1725- இறப்பு கிபி 1764) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முதுகுளத்தூர் தாலுகா மேலபனையூர் என்ற கிராமத்தில் வீர சைவ வெள்ளாளர் குலத்தில் சாதரண விவசாய குடும்பத்தில் கி.பி 1725 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்ற பெயரில் முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். மதுரையின் ஆட்சியாளராக பணி செய்த வேளை அவர் கான் சாகிப் என பிரபலமாக அறிய படுகிறார். ஆற்காட்டு படை தளபதியாகவும், பின்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாகவும் பணி செய்தார். பிரிட்டிஷ் மற்றும் ஆற்காட்டு கூட்டு படையின் பணியாளராக தென் இந்தியா முழுவதும் படையெடுத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்கி வெற்றி மேல் வெற்றி ஈட்டிக்கொடுத்தார். அதற்கு கான் சாகிப் பட்டமளித்தனர். அந்த சமயத்தில் மதுரை நாயக்கர்கள...