டாக்டர் ராஜேந்திர பிரசாத்..! Dr. Rajendra Prasad ..!

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!

Dr. Rajendra Prasad ..!

BZ.Famous Men,

குடியரசுத் தலைவர்..!

BZ.Famous Men,

(26 ஜனவரி 1950 - 13 மே 1962)

◆ வடக்கு  பீகாரில்  ஓர் குக்கிராமத்தில்  1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். 

◆ பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார்.

◆ தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார்.

◆ 1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். 

◆ 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக் கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

◆ 1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.

◆  மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டிற்கு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

◆ 1937-ல் காங்கிரஸ் அமைச்சரவைகள் பொறுப்பேற்ற போது சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலான ஆசாத் ஆகியோரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு இந்த அமைச்சரவைகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் வழங்கிவந்தது. 

◆ 1939-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டபோது ராஜேந்திர பிரசாத் அந்த நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்தார்.

◆ அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றி பெருமை சேர்த்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியா குடியரசாக தம்மை அறிவித்துக் கொண்ட நாளில் நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

◆ சுதந்திர இந்தியாவின் இளம் பருவ நாட்களில் அதனை வழிநடத்திய பெருமை டாக்டர் பிரசாத்தையே சேரும். 

◆ 1962-ம் ஆண்டு தமது குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மறைந்தார்.

Comments

Popular posts from this blog

கௌதம புத்தர் | Gautama Buddha

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!