டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 

(13 மே 1962 - 13 மே 1967)

புகழ் பெற்ற மனிதர்கள்,

இந்தியா  குடியரசுத் தலைவர்..!


இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பெருமை சேர்த்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருத்தணியில் பிறந்தார். 

மிகச் சிறந்த மாணவராக திகழ்ந்த அவர் இந்திய தத்துவஇயலின் அனைத்துத் துறைகளையும் கற்றறிந்து உலக புகழ்பெற்ற தத்துவஇயல் அறிஞராகப் பரிமளித்தார்.

திருப்பதியில் பள்ளிக் கல்வியையும், வேலூரிலும் பின்னர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியிலும் பயின்ற அவர் தத்துவஇயலில் பட்டம் பெற்றார். சென்னையிலும் மைசூர், கல்கத்தா, ஆந்திரா ஆகிய பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியராக பணியாற்றிய அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முதலாவது இந்திய பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் ஐக்கிய நாடுகள் அவையின் யுனஸ்கோ அமைப்பில் இந்திய குழுவிற்கு தலைவராக பலமுறை பொறுப்பேற்று சென்றவர் ஆவார். உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் அவரது புலமையைப் போற்றி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன.

சோவியத் யூனியனில் சிறப்பு இந்திய தூதராக பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்திய குடியரசின் குடியரசுத் துணைத் தலைவராக இருமுறை பணியாற்றியவர். 1962-ல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற அவர் 1967 வரை தமது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றினார்.

தத்துவஇயல் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள், ஆற்றிய உரைகள் இன்று வரை உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1975-ம் ஆண்டு மறைந்தார்.

Comments

Popular posts from this blog

கௌதம புத்தர் | Gautama Buddha

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!