Skip to main content

டாக்டர் ஜாகீர் ஹுசைன்

டாக்டர் ஜாகீர் ஹுசைன் 

(13 மே 1967 - 3 மே 1969)

புகழ் பெற்ற மனிதர்கள்,

இந்தியா  குடியரசுத் தலைவர்..!

ஹைதராபாத்தில் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பிறந்த டாக்டர் ஜாகீர் ஹுசைன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டாவாவில் தமது பள்ளிக் கல்வியை முடித்தபின் அலிகரில் கல்லூரி கல்வி பயின்று முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயின்ற அவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார்.

புது தில்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய அவர் மிகச் சிறந்த கல்வியாளராக உருவெடுத்தார். 1938-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படை கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருமை டாக்டர் ஜாகீர் ஹுசைனையே சேரும்.

1948-ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்ற அவர் உலக பல்கலைக் கழக சேவை அமைப்பின் அகில உலக தலைவராகவும் செயலாற்றினார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட அவர் யுனஸ்கோவின் நிர்வாகக் குழுவில் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

மத்திய உயர் நிலை கல்வி வாரியத்தின் தலைவர், பல்கலைக் கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்த டாக்டர் ஜாகீர் ஹுசைன் 1957-ல் பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார். 1967-ம் ஆண்டு இந்திய குடியரசின் மூன்றாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இப்பதவியிலிருக்கும் போது 1969-ம் ஆண்டு மே 3-ம் தேதி காலமானார்.

நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது டாக்டர் ஜாகீர் ஹுசைனுக்கு 1963-ம் ஆண்டு வழங்கப்பட்டது.




    Comments

    Popular posts from this blog

    கௌதம புத்தர் | Gautama Buddha

    டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!