மாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்..!
மாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்..! எகிப்திய அரசர் குஃபூ (KhufU) சீயோப்ஸ் (கி.மு. 26 ஆம் நூற்றாண்டு) புகழ் பெற்ற மனிதர்கள், எகிப்தில் கீஸா பிரமிடைக் கட்டியவர் குஃபூ (எ) சீயோப்ஸ்..! கீஸா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியதற்காக அழியாப் புகழ்பெற்ற எகிப்திய அரசர் குஃபூ (KhufU) (இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ் ஆகும்) இவர் தமக்குக் கல்லறையாக இந்தப் பிரமிடைக் கட்டினார் என்பர். பிறந்த, இறந்த தேதிகள் சரியாகத் தெரியவில்லை. எனினும், இவர் கி.மு. 26 ஆம் ஆண்டு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரைத் தமது தலைநகராகக் கொண்டிருந்தார் என்றும், இவர் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்தார் என்றும் அறிகின்றோம். இதைத் தவிர, இவரது வாழ்க்கை குறித்து வேறு தகவல்கள் தெரியவில்லை. இந்த மாபெரும் பிரமிடு மிகப் புகழ் பெற்றது, மனித முயற்சியால் எழுப்பப்பட்ட மிகப் பிரம்மாண்டமான ஒரு கட்டுமானம் என்று மட்டுமே சொல்ல முடியும். பண்டைய நாட்களில் கூட இது, உலகின் ஏழு அதிசயங்களும் ஒன்றாகக் கருதப்பட்டது. மற்ற ஆறு அதிசயங்களுள் காலத்தால் அழிந்துவிட்ட போதிலும் மாபெரும் இந்த பிரமிடு காலத...