விஸ்வேஸ்வரய்யா

விஸ்வேஸ்வரய்யா..!

பிரிட்டிஷ் அரசை பிரமிக்க வைத்த இந்தியப் பொறியியல் மேதை..!

மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா,

புகழ் பெற்ற மனிதர்கள்,



பிரிட்டிஷ் அரசை பிரமிக்க வைத்த இந்தியப் பொறியியல் மேதை..!

விஸ்வேஸ்வரய்யா..!

★ இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் போற்றிக் கொண்டாடிய இந்தியப் பொறியியல் மேதையின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

 ★ இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் போற்றிக் கொண்டாடிய இந்தியப் பொறியியல் மேதையின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

★சிக்கபல்லபுரா மாவட்டத்தில் மைசூருக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்தநாளையே இந்திய பொறியாளர் கர்நாடகமாகக் கொண்டாடி வருகிறோம்.

★ 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிதான் அவர் பிறந்தார்.  சிறந்த பொறியாளராக விளங்கிய இவர் பொறியில் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்து, மும்பை (அப்போது பாம்பே) பொதுப்பணித்துறையிலும் பின், இந்திய பாசனத் துறையிலும் பணியாற்றினார்.

★ முதலில் தானியங்கி மதகு ஒன்றை வடிவமைத்து காப்புரிமை பெற்றவர் விஸ்வரைய்யாதான். 

★ இந்தத் தானியங்கி மதகு முதல் முறையாக 1903ஆம் ஆண்டு புனே அருகே உள்ள கடக்வசல அணையில் அமைக்கப்பட்டது.

★ பின், குவாலியர், கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நிறுவப்பட்டது.

★ ஹைதராபாத்தில் வெள்ளப் பாதுகாப்பு அமைப்பை அதி நுட்பத்துடன் அமைத்தது இவரது தலைசிறந்த பணிகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

★ விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடல் அரிப்பை தடுக்கும் அமைப்பை உருவாக்குவதிலும் முக்கியமான பங்காற்றினார்.

★ அந்த காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் கட்டுமானத் திட்டத்தை மேற்பார்வையிட்டவரும் இவரே.

★ 1894ஆம் ஆண்டு மைசூருக்கு அருகில் சிவசமுத்திரத்தில் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி ஆலை அமைய வித்திட்டவர் ஆவார்.

★ திருப்பதியில் திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக உயிரிழந்தார்.

★ 1908ஆம் ஆண்டு பொறியாளர் பணிகளில் விருப்ப ஓய்வு பெற்ற அவர், மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார்.

★ நவீன மைசூர் அரசின் தந்தை என்ற பெயரையும் பெற்றார்.

★ கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் போன்றவை இவர் மைசூர் திவானாக இருந்தபோது எழுந்தவை. 

★ 1917ஆம் ஆண்டு பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைப்பில் முக்கிய தூண்டுகோலாகத் திகழ்ந்தார்.

★ பின்னாளில் அவரது பணியைப் போற்றும் விதமாக அந்நிறுவனத்துக்கு விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

★ மைசூர் திவானாக ஆற்றிய அளப்பரிய பொதுச்சேவைக்காக பிரிட்டிஷ் அரசு இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் (நைட் கமாண்டர்) என்ற பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

★ லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.

★ 1923ஆம் ஆண்டு இந்திய அறிவியல் காங்கிரஸ் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் நடந்தேறியது.

★ கிராமங்களைத் தொழில் மயமாக்குதல், இந்தியாவின் தொழில் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரம் ஆகியவை பற்றிய நூல்களையும் எழுதியுள்ளார். 

★ Memoirs of My Working Life என்ற சுயசரிதை நூலும் Reconstructing India, Nation Building and Prosperity through Industry ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்.

★ பொறியல் துறையில் பல சாதனைகள் செய்ததற்காக விஸ்வேஸ்வரய்யாவுக்கு 1955ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

★ பிரிட்டிஷ் அரசின் சர் பட்டம் அளிக்கப்பட்டது.

மைசூர் திவான் :

★ 1908ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் விசுவேசுவரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். 

★ மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராச உடையாரின் ஆதரவுடன் திவானாக மைசூர் அரசில் இதற்கு முன் நிகழ்ந்திராத பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார்.

★ கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தித் திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் , பொதுப் பணிகளுக்கு இவர் காரணமாக இருந்தார். 

★ 1917ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

★ இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.


கௌரவிப்பு

★ உருவாக்கிய இந்தியப்பேரரசின் ஒழுங்கின் நைட் கம்மாண்டர் (நைட் கமாண்டர்) என்ற பட்டம் இவருக்கு மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய அளப்பரிய பொதுச்சேவைக்காகப் பிரித்தானியரால் வழங்கப்பட்டது.

★ இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

★ இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிப்புறு உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். 

★ இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஃபெலோஷிப் இவருக்கு வழங்கப்பட்டது.

★ பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கின. இந்திய அறிவியல் காங்கிரசின் 1923 ஆம் ஆண்டு அமர்விற்கு இவர் தலைவராக இருந்தார்.


குற்றச்சாட்டு :

★ பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ண ராஜசாகர் அணையை கட்ட அவர் முயன்ற போது அரசர் யோசித்தார் .

★ அதன் மூலம் மின்சாரம் தயாரித்து பிற மாநிலத்துக்கு விற்கலாம் என இவர் சொல்லி சாதித்தார்.காவிரியின் நடுவே ஒப்பந்தத்தை மீறி அணை கட்டினார்கள்.


நூல்கள் :

◆ இந்தியாவின் மீள்கட்டமைப்பு (1920)

திட்டமிட்ட இந்தியப் பொருளாதாரம் (1934)

◆ கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும் இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சி பற்றியும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் சில நூல்கள் எழுதினார்.


நினைவுச் சின்னங்கள் :

★ விசுவேசுவரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சி யகம், பெங்களுரு.

★ விசுவேசுவரய்யா தொழில்நுட்பப் பல்கலைகழகம் (தலைமையகம், பெல்காம்)

விசுவேசுவரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம்,நாகபுரி மராட்டிய மாநிலம்.

★ விசுவேசுவரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை, பத்ராவதி.





Comments

Popular posts from this blog

கௌதம புத்தர் | Gautama Buddha

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!