மேற்கத்திய உலகின் தத்துவ ஞானி சாக்ரடீஸ் | Socrates, the philosopher of the Western world

மேற்கத்திய உலகின் தத்துவ ஞானி சாக்ரடீஸ்..! Socrates, the philosopher of the Western world ..! தத்துவ ஞானி சாக்ரடீஸ்..! சாக்ரடீஸ் (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர்கள் ஜெனோபன் (Xenophon) மற்றும் பிளேட்டோ (Plato) ஆகிய இவர்களும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்கள். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸ் என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீஸின் பிறப்பு சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 2500 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´ இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலகட...