Posts

பின் சிரின் 8 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கனவுகளின் மொழிபெயர்ப்பாளர் | Bin Sirin was a famous 8th century interpreter of dreams

Image
பின் சிரின்  8 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற  கனவுகளின்  மொழிபெயர்ப்பாளர் Bin Sirin was a famous 8th century interpreter of dreams இஸ்லாமிய கண்டு பிடிப்புகள்.! முஹம்மது இபின் சிரின்  (அரபு நாட்டின் பாஸ்ராவில் பிறந்தார்) ★ இவர் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் ஆவார் .  கனவுகளை மொழி பெயர்ப்பவர்.  இவர் அனஸ் இப்னு மாலிக்கின் சமகாலத்தவர் ஆவார். ★ யெஹியா கவுடாவின் முஸ்லீம் ஒன்இரோமான்சி கனவுகள் மற்றும் பழைய அரபு பாரம்பரியத்தில் அவற்றின் அர்த்தங்கள் பற்றிய மிகவும் அதிகாரப்பூர்வமான கலைக்களஞ்சிய குறிப்பு புத்தகத்தின்படி (ISBN 0-533-08877-1, 1991 இல் வெளியிடப்பட்டது), ★ இந்த  புகழ்பெற்ற ஹஸ்ரத் அபு பக்கர் முஹம்மது இபின் சிரின் அல்-அன்சாரி (RA) (33-110 AH; AD 653-728), உண்மையில், பாஸ்ராவில் பிறந்தார், குறிப்பிடப்பட்டபடி, AD 653 இல், அதாவது, அல்-மக்காவிலிருந்து அப்போதைய அல்-மதீனத்துல் முனாவராவுக்கு முஹம்மது குடிபெயர்ந்த 33 வது ஆண்டு.  கலீஃபா உஸ்மான் இப்னு அஃப்பானின் ஆட்சி முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் பிறந்தவர். ★ முஹம்மதுவின் தந்தை (அபு பக்கர...

மகாத்மா காந்தி (Mahatma_Gandhi)

  சுதந்திர போராட்ட வீரர்கள்  1. மகாத்மா காந்தி (Mahatma_Gandhi) ◆ ‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.  ◆ ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது.  ◆ இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர்.  ◆ இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.  ◆ தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தி...
தாமஸ் ஆல்வா எடிசன் ◆ உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான  தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவை சேர்ந்தவர்.  ◆ இவர் ஸ்கார்லெட் காய்ச்சல்  காரணமாக தாமதமாக தனது    8 வயதில் பள்ளியில் பயில அனுப்பப்பட்டார்.  ◆ அங்கு மூன்று மாதங்களில் பள்ளி ஆசிரியரால் இனி பள்ளிகூடம் வர வேண்டாம் என நிராகரிக்கப்பட்டவர். ◆  தனது அன்னையின் வழிகாட்டலின் படி சுயமே படித்து மக்கள் மனம் மகிழ 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் செய்த அறிவியல் கண்டுபிடிப்பாளர். ◆  எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.. ◆ இவரது பல தரப்பட்ட உற்பத்தி தொழில் முயற்சிகளால் படித்தவர்கள் அதிகமானோர் அவரிடம் வேலை வாய்ப்பு பெற்றனர்.  ◆ நாமும் அவர் போல் வெற்றி பெற அவர் நமக்கு விட்டு சென்ற வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி. ஆரம்ப கால வாழ்க்கை ◆ தாமஸ் ஆல்வா எடிசன் (கி.பி.1847 - கி.பி.1931) அவர்கள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி 1847 ஆம் ஆண்டில் ஓஹியோவின...

கௌதம புத்தர் | Gautama Buddha

Image
கௌதம புத்தர் Gautama Buddha bz famousmen, புத்தர் : கௌதமபுத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். மனிதனின் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் கண்டுபிடித்த ஞானி இவர். புத்தர்  பி றப்பு : சித்தார்த்தன்  கிமு 563 அல்லது 480 இடம் : லும்பினி, நேபாளம் இறப்பு : கிமு 483 அல்லது 400 (வயது 80) இடம் : குசிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா அறியப்படுவது பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார் பெற்றோர் : சுத்தோதனர் – மாயா வாழ்க்கைத் துணை : யசோதரை பிள்ளைகள் : ராகுலன் ◆ கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும்  இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். ◆  கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அர...

மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான் | Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan

Image
மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான்..! Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan..! (மதுரை நாயகம்)  முதுகுளத்தூர் மண்ணின் மைந்தன் மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான், (பிறப்பு கி.பி 1725- இறப்பு கிபி 1764) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முதுகுளத்தூர் தாலுகா மேலபனையூர் என்ற கிராமத்தில் வீர சைவ வெள்ளாளர் குலத்தில் சாதரண விவசாய குடும்பத்தில் கி.பி 1725 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்ற பெயரில் முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். மதுரையின் ஆட்சியாளராக பணி செய்த வேளை அவர் கான் சாகிப் என பிரபலமாக அறிய படுகிறார். ஆற்காட்டு படை தளபதியாகவும், பின்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாகவும் பணி செய்தார். பிரிட்டிஷ் மற்றும் ஆற்காட்டு கூட்டு படையின் பணியாளராக தென் இந்தியா முழுவதும் படையெடுத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்கி வெற்றி மேல் வெற்றி ஈட்டிக்கொடுத்தார். அதற்கு கான் சாகிப் பட்டமளித்தனர். அந்த சமயத்தில் மதுரை நாயக்கர்கள...

யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்?

Image
யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்? ” சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! “ தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! -வாழ்க்கைக் குறிப்பு! இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் க...

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு | Biography of the great leader Kamaraj

Image
பெருந்தலைவர்  காமராஜரின் வாழ்க்கை வரலாறு...! Biography of the great leader Kamaraj in tamil.! புகழ் பெற்ற மனிதர்கள், பெருந்தலைவர் காமராஜர்: பெயர் : கு. காமராஜர் இயற்பெயர் : காமாட்சி பிறப்பு :  15-07-1903 இறப்பு : 02-10-1975 பெற்றோர் : குமாரசாமி,  சிவகாமிஅம்மையார் இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா வகித்த பதவி : தமிழக முதல்வர் விருதுகள் : பாரத ரத்னா விருது வாழ்க்கை வரலாறு ★ தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர். ★ ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் ‘பொற்காலமாக’ கருதப்படுகிறது. ★  பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.  ★ தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’,  ‘தென்னாட்டு காந்தி’,  ‘படிக்காத மேதை’,  ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப் படுகிறார்.  ★ சமுதாயத்தில், தாழ்த்தப்பட்ட...