தாமஸ் ஆல்வா எடிசன் ◆ உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவை சேர்ந்தவர். ◆ இவர் ஸ்கார்லெட் காய்ச்சல் காரணமாக தாமதமாக தனது 8 வயதில் பள்ளியில் பயில அனுப்பப்பட்டார். ◆ அங்கு மூன்று மாதங்களில் பள்ளி ஆசிரியரால் இனி பள்ளிகூடம் வர வேண்டாம் என நிராகரிக்கப்பட்டவர். ◆ தனது அன்னையின் வழிகாட்டலின் படி சுயமே படித்து மக்கள் மனம் மகிழ 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் செய்த அறிவியல் கண்டுபிடிப்பாளர். ◆ எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.. ◆ இவரது பல தரப்பட்ட உற்பத்தி தொழில் முயற்சிகளால் படித்தவர்கள் அதிகமானோர் அவரிடம் வேலை வாய்ப்பு பெற்றனர். ◆ நாமும் அவர் போல் வெற்றி பெற அவர் நமக்கு விட்டு சென்ற வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி. ஆரம்ப கால வாழ்க்கை ◆ தாமஸ் ஆல்வா எடிசன் (கி.பி.1847 - கி.பி.1931) அவர்கள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி 1847 ஆம் ஆண்டில் ஓஹியோவின...
Posts
Showing posts from November, 2022