Posts

Showing posts from June, 2022

கௌதம புத்தர் | Gautama Buddha

Image
கௌதம புத்தர் Gautama Buddha bz famousmen, புத்தர் : கௌதமபுத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். மனிதனின் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் கண்டுபிடித்த ஞானி இவர். புத்தர்  பி றப்பு : சித்தார்த்தன்  கிமு 563 அல்லது 480 இடம் : லும்பினி, நேபாளம் இறப்பு : கிமு 483 அல்லது 400 (வயது 80) இடம் : குசிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா அறியப்படுவது பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார் பெற்றோர் : சுத்தோதனர் – மாயா வாழ்க்கைத் துணை : யசோதரை பிள்ளைகள் : ராகுலன் ◆ கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும்  இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். ◆  கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அர...

மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான் | Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan

Image
மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான்..! Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan..! (மதுரை நாயகம்)  முதுகுளத்தூர் மண்ணின் மைந்தன் மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான், (பிறப்பு கி.பி 1725- இறப்பு கிபி 1764) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முதுகுளத்தூர் தாலுகா மேலபனையூர் என்ற கிராமத்தில் வீர சைவ வெள்ளாளர் குலத்தில் சாதரண விவசாய குடும்பத்தில் கி.பி 1725 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்ற பெயரில் முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். மதுரையின் ஆட்சியாளராக பணி செய்த வேளை அவர் கான் சாகிப் என பிரபலமாக அறிய படுகிறார். ஆற்காட்டு படை தளபதியாகவும், பின்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாகவும் பணி செய்தார். பிரிட்டிஷ் மற்றும் ஆற்காட்டு கூட்டு படையின் பணியாளராக தென் இந்தியா முழுவதும் படையெடுத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்கி வெற்றி மேல் வெற்றி ஈட்டிக்கொடுத்தார். அதற்கு கான் சாகிப் பட்டமளித்தனர். அந்த சமயத்தில் மதுரை நாயக்கர்கள...

யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்?

Image
யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்? ” சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! “ தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! -வாழ்க்கைக் குறிப்பு! இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் க...